Homeசெய்திகள்தமிழ்நாடு"கப்பலோட்டிய தமிழரை நன்றிப் பெருக்குடன் நினைவுக் கூர்வோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

“கப்பலோட்டிய தமிழரை நன்றிப் பெருக்குடன் நினைவுக் கூர்வோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

-

- Advertisement -

 

"கப்பலோட்டிய தமிழரை நன்றிப் பெருக்குடன் நினைவுக் கூர்வோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
Photo: TN Govt

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 87-வது நினைவுநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவச் சிலைக்கு அமைச்சர் சாமிநாதன், மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.

தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ” என மகாகவி பாரதி மனம் நொந்து பாடும் அளவுக்குக் கோவைச் சிறையில் கொடுமைக்குள்ளான வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்!

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!

தன் இளமை, சொத்து, பாரிஸ்டர் பட்டம் என அனைத்தையும் இழந்து வாழ்நாளெல்லாம் இந்திய விடுதலைக்காகப் போராடிய தனிப்பெரும் தியாகசீலராம் கப்பலோட்டிய தமிழரை நன்றிப்பெருக்குடன் நினைவுகூர்வோம்! அவரது பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்! எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ