2025-ல் மறைந்த சமூகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு சட்டபேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தின் தொடக்கத்தில், 2025 ஆம் ஆண்டில் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏக்களான சா.பன்னீர்செல்வம், எல்.கணேசன், சேந்தமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுச்சாமி ஆகியோரின் மறைவுக்கு பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது. மேலும், மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டீல், புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன், ஏ.வி.எம். குழுமத்தைச் சேர்ந்த சரவணன், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாச்சலம் வெள்ளையன் (முருகானந்தம்) ஆகியோரின் மறைவுக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மறைந்த அனைவரின் சமூக சேவைகள், அரசியல் பங்களிப்புகள் மற்றும் பொதுவாழ்க்கையில் அவர்கள் ஆற்றிய பணி ஆகியவற்றை நினைவுகூர்ந்த பேரவைத் தலைவர் அப்பாவு, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இரங்கல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இரங்கல் தீர்மானம் வாசித்தப் பின்னர், சட்டப்பேரவை நிகழ்வுகள் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் நாளை காலை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்தாா்!!


