spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுராந்தகதில் NDA கூட்டணி பொதுக்கூட்டம்… மத்திய பாதுகாப்பு வளையத்தில் விழா மேடை…

மதுராந்தகதில் NDA கூட்டணி பொதுக்கூட்டம்… மத்திய பாதுகாப்பு வளையத்தில் விழா மேடை…

-

- Advertisement -

வருகின்ற 23ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகள் தீவரம் அடைந்துள்ள நிலையில் அங்கு அமைக்கப்படும் விழா மேடை மத்திய பாதுகாப்பு குழுவின் கண்காணிப்பு வட்டத்துக்குள் கொண்டு வந்ததுள்ளது.  மதுராந்தகதில் NDA கூட்டணி பொதுக்கூட்டம்… மத்திய பாதுகாப்பு வளையத்தில் விழா மேடை…செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகின்ற 23ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 40 ஏக்கரில் நடைபெற்று வரும் மேடை அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விழா மேடை தற்போது மத்திய பாதுகாப்பு குழுவின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 3500 காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பிரதமர் வருகை ஒட்டி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

we-r-hiring

பிரதமர் வருகை ஒட்டி வரும் 23ஆம் தேதி அன்று மதுராந்தகத்தில் உள்ள இரு தேசிய நெடுஞ்சாலைகள் அவர் வருகையின் போது முற்றிலும் முடக்கப்பட்டு வாகனங்களை இயக்க தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கிழக்கு கடற்கரை சாலை மூலமாக வாகனங்களை அனுப்பவும், அதே போன்று தென் மாவட்டத்தில் இருந்து சென்னை வரும் வாகனங்கள் மேல்மருவத்தூர் வழியாக உத்திரமேரூர், காஞ்சிபுரம் வழியாக சென்னை செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவர் மீனம்பாக்கத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்க 12 ஏக்கரில் மூன்று எலி பேட் அமைக்கப்பட்டுள்ளது.

மேடைக்கு அருகே உள்ள இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் குடியிருப்புகளில் யார் யார் உள்ளனர் என்ற முழுமையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த பகுதியில் அமைந்துள்ள கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் மாணவர்களின் பாதுகாப்பை  கருத்தில் கொண்டு 23 ஆம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ரவுடியின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!!

MUST READ