spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!

-

- Advertisement -

 

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!
Video Crop Image

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.

we-r-hiring

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

இது குறித்து சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.18) காலை 08.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், “ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகே அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 50 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. செலவு அதிகரித்துள்ளதால், தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம்.

நாட்டின் வளர்ச்சிபடி, பார்த்தால் 100 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி இருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்டத் தேர்வுக் கட்டணத்தை நிறுத்தி வைக்க உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த செமஸ்டரில் இருந்து தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பர்த்டே ஸ்பெஷல்!

எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. கல்லூரிகளில் கூடுதலாக செமஸ்டர் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அதை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அமைச்சரின் உத்தரவு தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ