கடந்த 2014 ஆம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன் உள்ளிட்டோர்
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜிகர்தண்டா முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் கடந்த நவம்பர் 10ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வெளியான முதல் நாளிலிருந்து நல்ல வசூலை பெற்று தருகிறது.
அந்த வகையில் உலகம் முழுவதும் 46 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 32 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வெற்றியை கார்த்திக் சுப்புராஜ், எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் படக்குழுவினர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


