இனிப்பான பாதுஷா செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
மைதா மாவு – கால் கிலோ
வனஸ்பதி எண்ணெய் – 100 கிராம்
சமையல் சோடா – அரை ஸ்பூன்
சர்க்கரை – கால் கிலோ
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, வனஸ்பதி, சமையல் சோடா ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து அரை கப் தண்ணீர் கலந்து பாகு போன்று காட்சி எடுக்க வேண்டும்.
அதன்பின் இசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி, அதனை வடை போல் தட்டிக் கொள்ள வேண்டும்.
அதன்பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு வடை போன்ற தட்டி வைத்துள்ள மாவை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும்.
அதே சமயம் மிதமான தீயில் அதனை லேசாக சிவந்து வரும் வரை வேக வைக்க வேண்டும்.
மாவு வெந்து வந்த பிறகு அவளை செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அதன்பின் அதனை எடுத்து பரிமாற வேண்டும். இப்போது சுவையான, இனிப்பான பாதுஷா ரெடி.
இதனை விழா காலங்களில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே ஒரு முறை நீங்களும் செய்து பார்க்கலாம்.