spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்"ஆவினை பொறுத்த வரை அதல்பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது"- அண்ணாமலை குற்றச்சாட்டு!

“ஆவினை பொறுத்த வரை அதல்பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது”- அண்ணாமலை குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"ஆவினை பொறுத்த வரை அதல்பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது"- அண்ணாமலை குற்றச்சாட்டு!

we-r-hiring

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதலபாதாளத்தில் போய்க்கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைது

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில அண்ணாமலை, “தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதலபாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. நாங்கள் கொடுத்த ரிப்போர்ட் பொய் என்றால், பா.ஜ.க.வில் இருந்து 5 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறேன்; ஆவின் நிறுவனத்திற்குள் அனுமதிக்கத் தயாரா? எல்லாவற்றையும் நான் படம் பிடித்துக் காட்டுகிறேன்; ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர்.

கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை

அமைச்சர் மனோ தங்கராஜ் அரசியலில் இருப்பது தமிழகத்திற்கு சாபக்கேடு. என்னால் நாவடக்கத்தைக் கடைப்பிடிக்க முடியாது; நான் அப்படி தான் பேசுவேன். நான் பேசுவது பிடிக்கவில்லை எனில், காதைப் பொத்திக் கொண்டு செல்லுங்கள். அமுல் இந்தியாவின் முன் மாதிரியான நிறுவனம்; ஆவின் கைக்கூலிகளின் நிறுவனம்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ