- Advertisement -
நவீன உலகில் தொழில்நுட்ப வசதிகள் நன்மை தரும் அளவு தீமைகளும் தருகிறது. அதில் டீப் ஃபேக்கும் ஒன்று. அந்த அளருக்கு முக்கிய பிரபலங்கள் அனைவரும் இந்த தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படுகின்றனர். தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மட்டுமன்றி தற்போது இந்தியிலும் அனிமல் உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக சின்மயின் கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கும் படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
A.I மூலம் மறுபடியும் எம்ஜிஆரை வைத்து படம் எடுத்தால் அந்தப் படம் கண்டிப்பா இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் pic.twitter.com/1cZXYZnYKs
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) November 28, 2023