Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகும் நிலவேம்பு குடிநீரும் மக்களின் அச்சமும்!

டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகும் நிலவேம்பு குடிநீரும் மக்களின் அச்சமும்!

-

- Advertisement -

டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகும் நிலவேம்பு குடிநீரும் மக்களின் அச்சமும்!தற்போது தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலானது பலரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சலை, மற்ற காய்ச்சல்களைப் போல் மருந்து மாத்திரைகளால் சரி செய்ய முடியாது. இந்நிலையில் நிலவேம்பு குடிநீரை நாம் உட்கொண்டால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம். அதாவது டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து விடும். அவ்வாறு குறைவதினால் மரணத்தை சந்திக்க நேரிடுகிறது.

இந்த நிலவேம்பு குடிநீரானது தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவதை தடுப்பதோடு மட்டுமல்லாமல் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகும் நிலவேம்பு குடிநீரும் மக்களின் அச்சமும்!

ஆனால் பெரும்பாலானவர்கள் நிலவேம்பு குடிநீரை குடிப்பதனால் மலட்டுத்தன்மை உண்டாகும் என்று வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதனால் மக்கள் பலரும் நிலவேம்பு குடிநீரை ஒரு வித பயத்துடன் தான் பருகுகிறார்கள்.

அதாவது நிலவேம்பு குடிநீர் பருகுவதனால் நோய் எதிர்ப்பு சக்தி தான் அதிகரிக்குமே தவிர, மலட்டுத்தன்மைக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. 50 வருடங்களுக்கு மேலாக பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்கன் குனியா, தோல் நோய், பால்வினை நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக சித்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

மேலும் நிலவேம்பு குடிநீரில் நிலவேம்பு மட்டும் அல்லாமல் ஒன்பது வகையான மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. அதனால் எந்த பயமும் இல்லாமல் நிலவேம்பு குடிநீரை பருகலாம் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகும் நிலவேம்பு குடிநீரும் மக்களின் அச்சமும்!

நிலவேம்பு குடிநீரானது, நிலவேம்பு, வெட்டி வேர், விளாமிச்சை வேர், கோரைக்கிழங்கு, மிளகு, சந்தனத்தூள், பேய் புடல், பற்படாகம், சுக்கு போன்ற பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த எல்லா பொருட்களையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கப்பட்ட இந்த பொடியில் ஒரு ஸ்பூன் பொடியுடன் 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து ,50 மில்லி லிட்டர் தண்ணீராக வற்றிவரும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதனை வடிகட்டி மிதமான சூட்டில் பருக வேண்டும். தயார் செய்த இந்த நிலவேம்பு குடிநீரை நான்கு மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும்.

இது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு செய்து பார்த்து, பருகவும்.

MUST READ