Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பாலக்கீரை கட்லட் செய்வது எப்படி?

பாலக்கீரை கட்லட் செய்வது எப்படி?

-

- Advertisement -

கீரை வகைகளில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் பாலக்கீரையில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இவை தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுகிறது. தற்போது பாலக்கீரையில் கட்லட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.பாலக்கீரை கட்லட் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:

பாலக்கீரை – 2 கட்டு
உருளைக்கிழங்கு – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு
பிரட் – 2
சீஸ் துருவல் – அரை கப்
மைதா மாவு – அரை கப்
பிரட் தூள் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

1. பாலக் கீரை கட்லட் செய்வதற்கு முதலில் இஞ்சி மற்றும் மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

2. பின் ஒரு பாத்திரத்தில் மூன்று கப் அளவு நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதில் பாலக் கீரையை போட்டு இரண்டிலிருந்து நான்கு நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.

3. அதைத் தொடர்ந்து கீரையில் உள்ள நீரை வடித்து கீரையை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. பின் பிரட்டை ஸ்லைஸாக வெட்டி எடுத்து அந்த ஸ்லைஸ்களை நீரில் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

5. அதன் பின் நன்கு அரைத்த கீரை கலவையுடன் முதலில் இஞ்சி மற்றும் மிளகாய் விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் உருளைக்கிழங்கு, உப்பு, சீஸ், பிரட் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.பாலக்கீரை கட்லட் செய்வது எப்படி?

6. பிசைந்த கலவையை சிறிது சிறிதாக எடுத்து விரும்பிய வடிவில் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

7. அதன் பின் அதனை மைதா மாவு கரைசலில் முக்கி எடுத்து அப்படியே பிரெட் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான பாலக்கீரை கட்லெட் ரெடி.

MUST READ