spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமணத்தி கணேசனின் வாழ்க்கை படத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

மணத்தி கணேசனின் வாழ்க்கை படத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

-

- Advertisement -

பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார்.

மாரி செல்வராஜ் தற்போது தமிழின் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருகிறார். அவர் தற்போது உதயநிதி இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வௌியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

we-r-hiring
இதனிடையே, வாழை என்ற திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இந்தப் படத்தின் பணிகள் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

வாழை படத்தை எடுத்து மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இப்படம், அர்ஜூனா விருது பெற்ற பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகிறது. இப்படத்திற்காக நடிகர் திருவ் விக்ரம், கபடி பயிற்சி பெற்று வருகிறார். அவருக்கு மணத்தி கணேசன் பயிற்சி அளிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

MUST READ