மழைக்காலங்களில் முதலில் கொசுக்கடியில் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதேசமயம் மழைக்காலத்தில் விரைவில் செரிமானமாக கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. சில உணவு பழக்க வழக்கங்களை மழைக்காலங்களில் பின்பற்றுவதன் மூலம் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். முடிந்தவரை 6 மணி நேரத்திற்கு மேல் சமைத்து வைத்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. நம் உணவில் காரம், துவர்ப்பு, கசப்பு போன்றவைகளை மழைக்காலங்களில் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். நாம் சமைக்கும் உணவுகளில் மிளகுப்பொடியை சேர்த்து சாப்பிடுவது நல்லது. காலையில் இஞ்சி தேநீர் சாப்பிடுவது நல்லது.
காலை

1. அதிக அளவு கீரை, கேரட், பீட்ரூட், ப சுரைக்காய், பூசணி, புடலங்காய் போன்ற காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
2. உண்ணும் உணவுகளை சூடாக சாப்பிட வேண்டும்.
3. மழைக்காலங்களில் சரியான உணவு முறையை பெறுவதற்கு, உணவில் வேர்க்கடலை சிறிதளவு சேர்த்துக் கொண்டால் நல்லது.
மதியம்
1. அசைவ உணவுகளான முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றை மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம். கோழிக்கறியில் சூப் செய்து குடிக்கலாம்.
2. மதிய உணவில் மோர் மற்றும் தூதுவளை ரசம் செய்து சாப்பிடலாம்.
3. வெஜிடபிள் புலாவ், வெஜிடபிள் கறி, பருப்பு கறி போன்ற சாத வகைகளையும் சாப்பிடலாம்.
4. வைட்டமின் சி ஊட்டச்சத்து நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி ஆகியவற்றை பருகலாம்.
இரவு
1. இரவு நேரங்களில் சப்பாத்தி இட்லி, தோசை, கோதுமை ரவை, சேமியா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
2. இரவு தூங்க செல்வதற்கு முன் பாலில் மிளகுத்தூள், மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து, பாலை சூடாக குடிக்க வேண்டும் இது சளி பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
3. ஐந்து முந்திரிப் பருப்பு அல்லது பாதாம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து, அத்துடன் அரை கப் தேங்காய் சேர்த்து அரைத்தால் இயற்கையான பால் கிடைக்கும். இதனையும் பருகலாம்.