spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஃபைட் கிளப் படத்தின் டீசர் வௌியானது

ஃபைட் கிளப் படத்தின் டீசர் வௌியானது

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் குமார் நடிக்கும் ஃபைட் கிளப் படத்தின் முன்னோட்டம் வெளியானது

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானாவர் லோகேஷ் கனகராஜ். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து படம் இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்தது. இதைத் தொடர்ந்து தற்போது ரஜினி நடிக்கும 170-வது திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

we-r-hiring
இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அத்தயாரிப்பு நிறுவனத்திற்கு G SQUAD என பெயர் வைத்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக உறியடி பட புகழ் விஜய் குமாரின் படத்தை அவர் தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதையடுத்து, டீசர் குறித்த அப்டேட் வெளியானது. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். அப்பாஸ் ரஹ்மத் இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு அடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஃபைட் கிளப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள டீசரை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும், இத்திரைப்படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி திரைக்கு வரும் என்றும் போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ