- Advertisement -
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 21-வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்திருந்தார். மிஷ்கின், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
