- Advertisement -
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் டாம் ஹாலண்ட். அன்சார்டட், டெவில் ஆல் தடைம், தி இம்பாசிபிள் உள்பட பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றனர். ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவார். ஸ்பைடர்மேன் வரிசை படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார். வெளிநாடு மட்டுமன்றி இந்தியாவிலும் டாமுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன் கதாபாத்திரம் நியாயமாக இருந்தால் மட்டுமே, ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் ஸ்பைடர்மேன் படத்தில் நடிக்கவில்லை என்றால் நான் முட்டாளாகத்தான் இருப்பேன் என்றும், தான் ஸ்பைடர்மேன் பாரம்பரியத்தை பாதுகாக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், அடுத்த பாகத்திற்காக நடிக்க மாட்டேன். தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நடிப்பேன். எந் கதாபாத்திரம் எப்படி இருக்கலாம் என்ற ஆலோசனை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.




