
சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (டிச.06) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புயல் பாதிப்பு- பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்!
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு டிசம்பர் 04- ஆம் தேதி முதல் டிசம்பர் 06- ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது.
“பால் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
புயல், வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (டிச.07) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.” இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.