இன்றுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இளம் வயது பெண்களே இதற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது அவைகளை இயற்கையான முறையில் சரி செய்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
ஒழுங்கற்ற மாதவிடாயினை சரி செய்ய புதினா இலையின் சாறு எடுத்து அதில் தேனை கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

பருத்தி இலை சாறை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர கருப்பை சம்பந்தமான குறைபாடுகளை சரி செய்யலாம்.
2 அல்லது 3 அரச இலை கொழுந்து எடுத்து அதனை நன்கு அரைத்து மோருடன் சேர்த்து பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள் வெளியேறும்.
கருப்பை நோய்கள் குறைய இலந்தை இலை, மிளகு பூண்டு ஆகியவை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை நோய்கள் குணமடையும்.
கருப்பை பலம் அடைய பூவரசு இலை மற்றும் பூவினை எடுத்து அரைத்து மோரில் கலந்து காலை வேளையில் குடித்து வர கருப்பை பலப்படும்.
கருப்பையில் இருக்கும் புண்களை சரி செய்ய, 30 கிராம் பெருங்காயம் 6 கிராம் பனைவெல்லம் ஆகிய இரண்டையும் சேர்த்து பொடி செய்து தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடையும்.அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலி குறையும்.
இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எவ்வித ஒரு ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.