spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்பெண் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பெண் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

-

- Advertisement -

திருமணமாகி 15 நாட்களே ஆன புதுப்பெண் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 22).இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் ரஞ்சித்குமார் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி( வயது 18) என்ற பெண்ணை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெற்றது.

பெண் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

we-r-hiring

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிரியதர்ஷினி குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று அங்கு இருந்த ஹீட்டரை போடமுன்றார்.அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதை கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.நடந்த சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளிப்பதற்காக ஹீட்டர் போடும்போது மின்சாரம் தாக்கி திருமணமான 15 நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ