- Advertisement -
அனிமல் திரைப்படம் வௌியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்த வாரம் புஷ்பா இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா பங்கேற்க உள்ளார்.

அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கி புகழ் பெற்ற சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் அனிமல். இத்திரைப்படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அப்பா மகன் பாசத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றாலும், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளது. அமெரிக்காவில் அனிமல் திரைப்படத்திற்கு வசூல் குவிந்து வருகிறது. இப்படத்தில் நாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா அடுத்து புஷ்பா இரண்டாம் பாகத்தில் இணைய இருக்கிறார். அடுத்த வாரம் தொடங்கும் படப்பிடிப்பில் ராஷ்மிகா பங்கேற்க உள்ளார்.



