Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக ஆட்சியைவிட திமுக ரூ.4,000 கோடி குறைவாக கடன் வாங்கியுள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியைவிட திமுக ரூ.4,000 கோடி குறைவாக கடன் வாங்கியுள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.

Stalin

we-r-hiring

அப்போது பேசிய அவர், “நாங்கள் மதவாதத்திற்கு தான் எதிரானவர்களே தவிர மதத்திற்கு அல்ல. கபட வேடதாரிகளுக்கு அனைத்து கோயில்களும் புத்துயிர் பெறுவது பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் மதவாத, இனவாத சக்திகளை அரசு வளரவிடாது மத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய துணை கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது.

என்னால் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் 67, இதுவரை 3346 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 86% செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்தது சாதாரண விஷயமல்ல. 2 ஆண்டுகளில் 10,000 கி.மீட்டர் நீள சாலைகள் ரூ.4,000 கோடியில் தரம் உயர்த்தப்படும். கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். அதிமுக ஆட்சியைவிட ரூ.4,000 கோடி குறைவாக கடன் வாங்கியுள்ளது திமுக அரசு. அதிமுக ஆட்சியில் 2020-21 இல் நிகர கடனாக ரூ.83,275 கோடி வாங்கப்பட்டது. கடன் நெருக்கடி இருந்தபோதும் திறமையான நிர்வாகத்தால் ரூ.79,33 கோடியாக கடனை குறைத்துள்ளோம். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அடுத்த ஆண்டு மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இனி காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி” எனக் கூறினார்.

MUST READ