Homeசெய்திகள்சினிமாமுகநூல் பக்கத்தில் ஆபாச வீடியோ... லோகேஷ் கனகராஜ் விளக்கம்..

முகநூல் பக்கத்தில் ஆபாச வீடியோ… லோகேஷ் கனகராஜ் விளக்கம்..

-

- Advertisement -
தனது முகநூல் பக்கத்தில் பல ஆபாச வீடியோக்கள் வெளியிடப்பட்டதாக வந்த செய்திகளுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய், த்ரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சனம் மட்டுமன்றி வசூல் ரீதியாகவும் லியோ படம் வெற்றி பெற்றது. சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் லியோ திரைப்படம் வசூலித்தது. படம் வெளியாகி ஒருமாதம் கடந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது.

இந்த நிலையில்தான், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முகநூல் பக்கத்தில் பல ஆபாச வீடியோக்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, லோகேஷின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
we-r-hiring

இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ், தனது டிவிட்டர் பக்கத்தில் நான் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் மட்டும்தான் இருக்கிறேன். அங்கு மட்டும்தான் எனக்கு கணக்கு உள்ளது. மற்ற சமூக வலைதளங்கள் எதிலும் நான் இல்லை. அதனால், இதில் மட்டும் என்னை பின்தொடரவும் என கூறியுள்ளார். இதனால், முகநூல் பக்கத்தில் லோகேஷ் இல்லை என்பதை உறுதி செய்துள்ள ரசிகர்கள் அது போலியான கணக்கு என முகநூல் பக்கத்தில் முறையிட்டு வருகின்றனர்.

MUST READ