- Advertisement -
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலமாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருமணம் செய்துகொண்டு இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகினர். இதையடுத்து, நயன் மற்றும் சமந்தாவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கியிருந்தார்.


இந்நிலையில், துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், அது பின்னர் கைவிடப்பட்டது. இதையடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இதனை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தினார்.



