spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இந்த மாதிரி ஒரு முறை இடியாப்பம் செய்து பாருங்க!

இந்த மாதிரி ஒரு முறை இடியாப்பம் செய்து பாருங்க!

-

- Advertisement -

இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1 கையளவு
சாமை மாவு – 1 கப்
குதிரைவாலி மாவு – 1 கப்இந்த மாதிரி ஒரு முறை இடியாப்பம் செய்து பாருங்க!

we-r-hiring

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
பொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன்
துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கட்டிப் பெருங்காயம் – செய்தளவு
பாதாம் – 5
முந்திரி – 5

தாளிக்க தேவையான பொருட்கள்:

கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு

இப்போது இடியாப்பம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்து அரைப்பதற்காக எடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் பாத்திரத்தில் போட்டு மிதமான சூட்டில் வைத்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஆற வைத்து அதனை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

சாமை, குதிரைவாலி மாவை லேசாக வறுத்து அரை கப் வெந்நீர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து இட்லி பாத்திரத்தில் இடியாப்பமாக பிழிந்து வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த மாதிரி ஒரு முறை இடியாப்பம் செய்து பாருங்க!

அதன் பின் கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிப்பதற்காக எடுத்து வைத்திருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். அதன்பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளற வேண்டும். மேலும் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து இடியாப்பத்தையும் உதிர்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் வறுத்து அரைத்த பொடிகளை தூவி கிளற வேண்டும்.

அதன்பின் இன்னொரு பாத்திரத்தில் நெய் சேர்த்து பாதாம், முந்திரி ஆகியவற்றை வறுத்து இடியாப்பத்தில் சேர்க்க வேண்டும்.

கூடுதல் சுவைக்காக எலுமிச்சை சாறு கொத்தமல்லி இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது சிறுதானிய இடியாப்பம் ரெடி.

MUST READ