
சென்னை மெட்ரோ ரயில்களில் ரூபாய் 5 கட்டணத்தில் பொதுமக்கள் இன்று (டிச.17) பயணம் செய்யலாம்.
மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!
மெட்ரோ ரயில் நிறுவன தினத்தையொட்டி, கடந்த டிசம்பர் 03- ஆம் தேதி ரூபாய் 5 கட்டணத்தில் பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. மிக்ஜாம் புயல், மழையால் ரூபாய் 5- ல் பயணிக்கும் சேவையை பெரும்பாலானோரால் பயன்படுத்த முடியவில்லை. கட்டண சலுகையை மீண்டும் மக்கள் பயன்படுத்த ஏதுவாக இன்று (டிச.17) ரூபாய் 5- ல் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.
ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!
க்யூஆர் அட்டை, பேடிஎம், வாட்ஸ் அப், போன் பே ஆகியவை மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். மெட்ரோ பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, காகித க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.