- Advertisement -
தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நடித்து, முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்து தற்போது நடிகராகவும் கலக்கி வருபவர் யோகி பாபு. ஆண்டுக்கு 3 திரைப்படங்களுக்கு குறைவில்லாமல் நடிக்கும் யோகிபாபு விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன் என தமிழில் அனைத்து டாப் நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் ஷாருக்கானுடன் சேர்ந்து ஜவான் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து புகழ் பெற்றார். இவர் அடுத்து நடித்துள்ள திரைப்படம் போட்.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 305-ல் கடவுள், புலி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், கசடதபற உள்பட பல படங்களை இயக்கிய சிம்பு தேவன் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிக்கிறார். இதில் யோகி பாபுவுடன், கவுரி ஜி கிஷன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். மாதேஷ் மாணிக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். முழுவதும் கடலில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை, 1940-களின் பின்னணியில் உருவாகியுள்ளது.




