spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தலைமுடி உதிராமல் தடுக்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தலைமுடி உதிராமல் தடுக்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

-

- Advertisement -

தலைமுடி உதிராமல் தடுக்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!பெண்கள் ஆண்கள் ஆகிய இரு பாலருக்குமே அவர்களின் அழகை பூர்த்தி செய்வது தலைமுடிதான். இன்றுள்ள காலகட்டத்தில் பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறது. அதனால் பலரும் கடைகளில் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு வகைகளையும், வேறு சில பொருட்களையும் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் பல பின் விளைவுகளை சந்திக்க நேரிடுகின்றன. முடி உதிர்தல் பிரச்சனைக்கு இயற்கையாகவே வீட்டில் தயார் செய்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

முடி உதிர்வை தடுப்பதற்கு கறிவேப்பிலை, நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி போன்றவை பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக எளிதில் கிடைக்கக்கூடிய கறிவேப்பிலை முடி உதிர்தல் பிரச்சனைக்கு முக்கிய தீர்வாக கருதப்படுகிறது.

we-r-hiring

உங்கள் அன்றாட வாழ்க்கையில் உண்ணும் உணவுகளில் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது கருவேப்பிலை சட்னி, கருவேப்பிலை துவையல், கறிவேப்பிலை சாதம் போன்றவற்றை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்வதால் இரும்பு சத்து அதிகரிக்கும். இதனால் முடி உதிர்வு தடுக்கப்படும்.தலைமுடி உதிராமல் தடுக்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

கறிவேப்பிலையின் ரகசியம்:

ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அத்துடன் சிறிதளவு சீரகம், மூன்று ஸ்பூன் அளவில் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவைகளையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அரைத்த விழுதினை எடுத்து அதில் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் இரண்டு சீட்டிகை பெருங்காயத்தூள் ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து விழுதுடன் சேர்த்து கலக்க வேண்டும்.

இந்தக் கலவையை பத்து நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் மிக மோசமாக இருக்கும் தலை முடி உதிர்வு கூட சட்டென குறைய தொடங்கும். அதன் பிறகு வித்தியாசத்தை நீங்களே காண்பீர்கள்.

இம்முறையை ஒரு தடவை செய்து பயன்படுத்திப் பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.தலைமுடி உதிராமல் தடுக்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

இந்த கறிவேப்பிலை விழுது முடி உதிர்வதை தடுப்பது மட்டுமல்லாமல் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கவும், நல்ல கொழுப்புகளை அதிகரிக்கவும் ,சளி தேக்கத்தை கரைக்கவும், ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை சுத்திகரிக்கவும் பயன்படுகிறது. இந்த விழுதின் சுவை கசப்பு தன்மை இல்லாமல் சுவையாக இருக்கும். இவை தலைப்பகுதியில் மண்டை ஓட்டில் இருக்கும் ரத்த ஓட்டத்தை சீர் செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

MUST READ