spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகயல்விழியாக கீர்த்தி சுரேஷ்... ரகு தாத்தா படத்தின் வீடியோ ரிலீஸ்...

கயல்விழியாக கீர்த்தி சுரேஷ்… ரகு தாத்தா படத்தின் வீடியோ ரிலீஸ்…

-

- Advertisement -
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ரகு தாத்தா படத்திலிருந்து புதிய புரோமோ காணொலி ஒன்று வெளியாகி உள்ளது. 

‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக தயாரிக்கும் திரைப்படம் ரகு தாத்தா. பெரும் வரவேற்பை பெற்ற தி ஃபேமிலி மேன் இணைய தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் எழுதி இயக்கிருக்கும் திரைப்படம் ரகு தாத்தா. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.

கதாநாயகியை மைப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு நடப்பு ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே மாதம் மொத்த படப்பிடிப்பும் நிறைவு அடைந்தது. இதையடுத்து, பின்னணி வேலைகள் மட்டும் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
we-r-hiring

இந்நிலையில், ரகு தாத்தா படத்திலிருந்து புதிய புரோமா வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்புடன் படக்குழு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. இது டிரெண்டாகி வருகிறது.

MUST READ