spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா2023-ல் மலையாளத்தில் 220 திரைப்படங்கள் வெளியீடு

2023-ல் மலையாளத்தில் 220 திரைப்படங்கள் வெளியீடு

-

- Advertisement -
தென்னிந்திய சினிமாக்களில் அண்மைக் காலமாக மலையாளத் திரைப்படங்களின் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மொழிகளில் ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்ட திரைப்டங்கள் வெளியாகிறது. மலைாயளம், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் அதிகபட்சம் நூறு திரைப்படங்களே உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மோலிவுட் எனப்படும் மலையாள சினிமா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாக இந்திய அளவில் கவனம் பெற்று, மலையாள திரைப்படங்களும் வசூல்களில் தடம் பதித்து வருகிறது.

குறிப்பாக, இந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி வரை சுமார் 220 திரைப்படங்கள் மலையாள மொழியில் மட்டும் வெளியாகி உள்ளன. நூற்றுக்கணக்கி்ல படங்கள் வெளியாகினாலும், 13 திரைப்படங்கள் மட்டுமே இதில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன. அதில், முன்னணி மற்றும் அறிமுக நடிகர்களின் திரைப்படங்களும் அடங்கும்

மம்முட்டி நடிப்பில் வெளியான கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை போல இருப்பதாக விமர்சனம் எழுந்தாலும் திரைக்கதையில் இத்திரைப்படம் வெற்றி பெற்றது. அதேபோல, ஜூட் ஆண்டனியின் இயக்கத்தில் வெளியான 2018 திரைப்படம் மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் பெரும் வரவேற்பை பெற்றது. 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவௌ்ளத்தை மையப்படுத்தி உருவான இத்திரைப்படம் பட்டையை கிளப்பியது. அதேபோல, ரோமாஞ்சம், மாலிக்காபுரம் உள்ளிட்ட படங்களும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்ததோடு, 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின.

MUST READ