வல்லாரை ஊறுகாய் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
வல்லாரைக்கீரை 200 கிராம்
தேங்காய் – ஒரு மூடி
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 50 கிராம்
வெந்தயம் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பூண்டு – எட்டு பல்
வற்றல் – 4
எலுமிச்சை – 1
கடலைப்பருப்பு – சிறிதளவு

வல்லாரை ஊறுகாய் செய்யும் முறை:
முதலில் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வல்லாரை, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பை வறுத்துக் கொள்ள வேண்டும். பின் நறுக்கிய வல்லாரை கீரையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், வத்தல், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் தேங்காய் துருவலை சேர்த்து, தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் வெந்தயம் சிறிது வறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரை வந்து வந்த பிறகு வதக்கிய அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் நல்லெண்ணெயில் கடுகு போட்டு தாளித்து ஊறுகாயில் கலந்து விட வேண்டும்.
வல்லாரைக்கீரையானது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் குடற்புண் இருக்கின்றவர்களும் கூட வல்லாரைக் கீரை ஊறுகாயை சாப்பிடலாம்.