Homeசெய்திகள்சினிமாபிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.... திரையுலகினர் இரங்கல்!

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.... திரையுலகினர் இரங்கல்!

கடந்த 1993 மணிக்குயில் என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி. அதைத் தொடர்ந்து இவர் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, சச்சின், வசீகரா, வின்னர், சுந்தரா ட்ராவல்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். போண்டா மணி, நடிகர் விஜய் உடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், சரத்குமார் போன்றவர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் போண்டா மணி. அது மட்டும் இல்லாமல் பூவே பூச்சூடவா போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.... திரையுலகினர் இரங்கல்!

60 வயது நிரம்பிய போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் தொடர்ந்து பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவின்றி இருந்த போண்டா மணியை அவரின் குடும்பத்தார் குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் போண்டா மணியை பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். போண்டா மணியின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ