Homeசெய்திகள்சினிமாநடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்.... ஏன் தெரியுமா?....வைரலாகும் வீடியோ!

நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்…. ஏன் தெரியுமா?….வைரலாகும் வீடியோ!

-

- Advertisement -

நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்.... ஏன் தெரியுமா?....வைரலாகும் வீடியோ!நடிகர் அஜித், எச்.வினோத் இயக்கிய துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கி வரும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் படம் உருவாகி வருகிறது. அஜர்பைஜானில் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அஜித், விடாமுயற்சி படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்துள்ளார். அந்த சமயம் நடிகை பாவனாவும் அஜித்தை சந்திக்க வந்திருக்கிறார். அப்போது பாவனாவிடம் “அஜித் சாரி பாவனா லேட்டாகிவிட்டது” என்று கூறியுள்ளார். அதற்கு பாவனா, “பரவாயில்லை நீங்கள் லேட்டாக வருவீர்கள் என்று தான் நானும் லேட்டாக வந்தேன்” என்று பதிலளித்துள்ளார். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்.... ஏன் தெரியுமா?....வைரலாகும் வீடியோ!

we-r-hiring

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அசல் திரைப்படத்தில் அஜித்தும் பாவனாவும் இணைந்து நடித்திருந்தனர். மேலும் அந்த படத்தில் இடம்பெற்ற பார்த்த ஞாபகம் இல்லையோ எனும் ரீமேக்ஸ் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மலையாள நடிகையான நடிகை பாவனா தமிழில் தீபாவளி, ஜெயம்கொண்டான், சித்திரம் பேசுதடி, வெயில் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

MUST READ