spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

-

- Advertisement -

 

டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!
Photo: AIADMK

அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (டிச.26) காலை 11.00 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ளது.

we-r-hiring

பிக் பாஸ் பூர்ணிமா ரவி நடித்துள்ள ‘செவப்பி’… ரிலீஸ் எப்போது தெரியுமா?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார்.

ரசிகர்களின் பேராதரவை பெறும் விதார்த்தின் ஆயிரம் பொற்காசுகள்!

முன்னதாக, பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ