- Advertisement -
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் முத்துக்காளை. வடிவேலுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். சண்டை கலைஞராக சினிமாவுக்குள் வந்த இவர், சண்டைகளில் காமெடியாக நடித்து, பின்னர் காமெடியாக நடித்து, பின்னர் காமெடி நடிகராகவும் மாறினார். சில படங்களில் சண்டை இயக்குராகவும் முத்துக்காளை பணியாற்றி இருக்கிறார்.

படிப்பின் மீது ஆர்வம் கொண்ட முத்துக்காளை, கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தில் பி.ஏ. வரலாறு படித்து தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து 2019-ம் ஆண்டு எம்.ஏ. தமிழ் படித்தவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று மீண்டும் பட்டம் வென்றார். இந்நிலையில், தற்போது இளங்களை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றுள்ளார். இது இவரது மூன்றாவது பட்டமாகும்.




