Homeசெய்திகள்தமிழ்நாடுஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- 18 பேர் காயம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- 18 பேர் காயம்

-

- Advertisement -

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஐந்தாம் சுற்று முடிவில் இதுவரை 18 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

alanganallur jallikattu

we-r-hiring

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க மொத்தம் 522 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மாடுபிடி வீரர்களுக்கு அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வளர்மதி தலைமையில் 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்னிலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிகட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் வீதம் மொத்தம் 9 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி, 6 சுற்றுகள் நிறைவடைந்தன. அதில் 21 காளைகளை அடக்கி சிவகங்கையை சேர்ந்த அபி சித்தர் முதலிடத்தில் உள்ளார். 16 காளைகளை அடக்கி அஜய்குமார் இரண்டாம் இடத்தில் உள்ளார். இதேபோல் 9 காளைகளை அடக்கில் அலங்கை என்ற ஊரைச் சேர்ந்த ரஞ்சித் மூன்றாவது இடத்தில் உள்ளார்.இதுவரை 378 காளைகள், 185 மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர்.

MUST READ