
சென்னை கோயம்பேடு அலுவலகத்திற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது மனைவியும், தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியனை கட்டியணைத்து பிரேமலதா விஜயகாந்த் கதறி அழுதார்.
மீண்டும் மக்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி…. மணிப்பூரில் பாரத் நியாய யாத்திரையைத் தொடங்குகிறார்!
கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்தின் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் குவிந்து வருவதால், ஒழுங்குப்படுத்தும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், கோயம்பேடு மேம்பாலம் அருகே அதிகளவு வாகன நெருக்கடியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள், பாடி மேம்பாலம், திருவீதி அம்மன் சர்வீஸ் ரோடு, சாந்தி காலனி வழியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மறைவிற்கு ராமதாஸ் இரங்கல்!
தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு கவிஞர் வைரமுத்து, கவுண்டமணி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.