spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமீண்டும் மக்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி.... மணிப்பூரில் பாரத் நியாய யாத்திரையைத் தொடங்குகிறார்!

மீண்டும் மக்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி…. மணிப்பூரில் பாரத் நியாய யாத்திரையைத் தொடங்குகிறார்!

-

- Advertisement -

 

"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமருக்கு துணிச்சல், ஆற்றல் இல்லை"- ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!
Photo: Congress

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., மீண்டும் மக்களைச் சந்திக்கப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

we-r-hiring

ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தம் – லதா ரஜினிகாந்த்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடா’ எனப்படும் நடைப்பயணத்தை மேற்கொண்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய யாத்திரை, இந்தாண்டு ஜனவரியில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் இரண்டாவது கட்டப் பயணம், வரும் ஜனவரி 14- ஆம் தேதி தொடங்குவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த பயணம் வரும் மார்ச் 20- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மணிப்பூரில் தொடங்கி, மகாராஷ்டிரா வரை இருக்கும் என்றும், இந்த முறை பேருந்து மூலம் ராகுல் காந்தி பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலார் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வில்லனாக களமிறங்கும் பிருத்விராஜ்

‘பாரத் நியாய’ யாத்திரை என்று இந்த பயணத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஒடிஷா, உத்தரப்பிரதேசம், அசாம் உள்பட 14 மாநிலங்களைக் கடந்து மும்பையில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ