நடிகர் விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி 68 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் விஜயுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி லைலா சினேகா பிரசாந்த் பிரபுதேவா மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நடிகர் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்களுக்கு முன்பாக பூஜியுடன் தொடங்கப்பட்ட தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் புத்தாண்டை முன்னிட்டு நாளை மாலை வெளியாகும் எனவும் செய்திகள் பரவி வருகிறது. இதற்கிடையில் தளபதி 68 படத்தின் டைட்டில் G.O.A.T – Greatest of All Time என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தளபதி 68 திரைப்படம் பிரபல ஹாலிவுட் படம் ஒன்றின் இன்ஸ்பிரேஷன் என்ற புதிய தகவலும் கிடைத்துள்ளது. அதாவது வில் ஸ்மித் நடிப்பில் வெளியான ஜெமினி மேன் எனும் திரைப்படத்தின் தழுவலாக இப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜெமினி மேன் திரைப்படத்தில் வில் ஸ்மித் மூன்று வருடங்களில் நடித்திருப்பார். ஆனால் சிறிய மாற்றத்திற்காக தளபதி 68 விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படமும் இது போன்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
