டிசம்பர் 28, யாராலும் மறக்க முடியாத அளவுக்கு துக்கமான நாளாக அமைந்து விட்டது. தமிழ் மக்கள் பேரிழப்பாக கேப்டன் விஜயகாந்தை இழந்து விட்டோம். அவருடைய உடல்நிலை நீண்ட நாட்களாகவே மோசமாக இருந்து வந்த நிலையில் சுவாசப் பிரச்சனை காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திடீரென அவர் உயிர் பிரிந்தது. இந்த அதிர்ச்சி செய்தி பலரையும் தீரா சோகத்தில் மூழ்கச் செய்துள்ளது. கேப்டன் மீது ரசிகர்களும் தொண்டர்களும் வைத்திருந்த அன்பை, மலர்கள் தூவியும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியும், கண்ணீர் மல்க வெளிப்படுத்தினர். அவருடைய உடல் பொதுமக்கள் பார்வைக்காக தீவுத்திடல் பகுதியில் வைக்கப்பட்டு பின்னர் இறுதியாக கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்திற்கு சொந்தமான “தேசிய திராவிட முற்போக்கு கழகம்” அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் தன் கையில் குத்தியுள்ள டாட்டூ சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்முக பாண்டியன் விஜயகாந்தின் இரண்டு கண்களையும் தன்னுடைய கையில் டாட்டூவாகக் குத்தியுள்ளார். இந்த டாட்டூவை சிங்கப்பூரிலேயே மிகவும் பிரபலமான கலைஞரால் குத்தப்பட்டது. அந்தக் கலைஞர் இந்த டாட்டூவைப் பதிக்கும் போதே இந்த கண்கள் மிகவும் பவர்ஃபுல்லாக உள்ளன என்றும் சண்முக பாண்டியனிடம் கூறினாராம். மேலும் “என் தந்தை விஜயகாந்த் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் அவர் நான் இறக்கும் வரை என்னுடனே இருப்பார் என்பதற்காகவே அவருடைய கண்களை டாட்டூவாகக் குத்தியுள்ளேன்” என்றும் சண்முக பாண்டியன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் அனைவரையும் மனதளவில் நெகிழச் செய்துள்ளது.
- Advertisement -