spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து'.... நடிகர் கமல்ஹாசன்!

‘அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து’…. நடிகர் கமல்ஹாசன்!

-

- Advertisement -

'அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து'.... நடிகர் கமல்ஹாசன்!நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரை உலகில் உலக நாயகனாக கொண்டாடப்படுபவர். தனது சிறுவயதிலிருந்தே படங்களில் நடிக்க தொடங்கியவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் வென்றுள்ளார்.மேலும் பத்மஸ்ரீ, பத்மபூஷன், தேசிய விருது பிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று குவித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பின்னணி பாடகர், நடன இயக்குனர் என் பன்முகத் திறமைகளை கொண்டவர்.

அதேசமயம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் மூலம் கடந்த 2018ல் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கினார். அக்கட்சியின் மூலம் பொதுமக்களுக்கு நலத்திட்ட பணிகளையும் செய்து வருகிறார். மேலும் விவசாய தொழிலாளர்களுக்காகவும், சினிமாவில் முன்னேற துடிப்பவர்களுக்காகவும் குரல் கொடுப்பவர். அந்த வகையில் சிறந்த படங்களை கொண்டு சிறந்த படங்களை கொடுக்கும் இயக்குனர்கள் நடிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பாராட்டி ஊக்கமளிப்பவர்.

we-r-hiring

இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இந்தியன் 2, கல்கி 2898AD, KH233 , தக் லைஃப் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். “அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால் தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாக இந்த புத்தாண்டை ஆக்குவோம். புதுப்பொலிவை புது வளர்ச்சியை புது வெற்றிகளை எதிர்கொள்வோம் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.'அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து'.... நடிகர் கமல்ஹாசன்!

மேலும் அனைவரும் தங்கள் துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் மறந்து 2024 ஆண்டின் புதிய தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஆகவே இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக அமைய வேண்டும் என அனைவருக்கும் எங்களின் APC நிறுவனத்தின் சார்பிலும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

MUST READ