spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகேப்டன் மில்லர் படத்திலிருந்து கொரனாரு பாடல் நாளை வெளியீடு

கேப்டன் மில்லர் படத்திலிருந்து கொரனாரு பாடல் நாளை வெளியீடு

-

- Advertisement -
தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு பாகங்கள் 1940 மற்றும் 1990 களில் நடப்பது போன்றும் மூன்றாம் பாகம் தற்போது நடப்பது போன்றும் வெளியாக இருக்கிறது. இந்த படம் தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக உருவாகியுள்ளது. அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. அந்த வகையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி தீர்க்கின்றனர். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்திலிருந்து கொரனாரு என்ற மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது. நாளை இப்பாடல் வெளியாகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12-ம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ