- Advertisement -
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கில் கலந்து கொள்ள தென்னிந்திய நடிகர் நடிகைகள் மட்டுமன்றி பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்களுக்கு அடுத்தடுத்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா வரும்ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீராமர் கோயில் குடமுழுக்கு, பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில், சந்தேகமே இல்லை. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க கோரி நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி குடமுழுக்கு விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்குக்கு அழைப்பிதழ் வழங்கும் பணியை தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் நேற்று முன்தினம் அழைப்பிதழை கொடுத்தனர். நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று அவருக்கும் அழைப்பிதழ் வழங்கினர்.




