

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
ரொம்ப மோசம்… பிரபல விமான நிறுவனம் மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு…
வரும் ஜனவரி 19- ஆம் தேதி முதல் ஜனவரி 31- ஆம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா- 2024 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஜன.04) மாலை 05.00 மணிக்கு நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, கேலோ இந்தியா நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடியிடம் அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், தமிழகத்திற்கு வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தியதாக தகவல் கூறுகின்றன.
விஜய்யின் 68வது படத்தில் இணைந்துள்ள அஜித் பட நடிகை
பின்னர், பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறிய அளவிலான திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.


