spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் வழக்கு விசாரணையை தடை செய்ய முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி!

விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் வழக்கு விசாரணையை தடை செய்ய முடியாது… உச்ச நீதிமன்றம் அதிரடி!

-

- Advertisement -

விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் வழக்கு விசாரணையை தடை செய்ய முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி!தன் ரசிகர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி நல்வழிப்படுத்தும் நடிகர்களுக்கும் சில நேரம் சிக்கல்கள் ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் 2021, நவம்பர் 2 அன்று நடிகர் விஜய் சேதுபதியும் சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சார்ந்த நடிகர் மகாகாந்தி என்பவருக்கும் பெங்களூர் விமான நிலையத்தில் வாய்த் தகராறாக ஆரம்பித்து கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கி கொண்டனர். இதனால் மகாகாந்தி விஜய் சேதுபதியின் மீது கிரிமினல் வழக்கும், தன்னை அவதூறாக பேசியதாக அவதூறு வழக்கும் பதிய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனால் விஜய் சேதுபதி இப்பிரச்சினை குறித்து நேரில் தோன்றி விளக்கம் அளிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. தன் மீதான இந்த விசாரணையை தடுக்கக் கோரியும் வழக்கை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தார் விஜய் சேதுபதி. உச்சநீதிமன்றம் இரு தரப்பையும் அமர்ந்து பேசி சமரசம் செய்து கொள்ள பரிந்துரைத்தது. இருப்பினும் பல நிலைகளில் இந்த வழக்கு தன் போக்கை மாற்றிக் கொண்டே இருந்ததே தவிர இன்னும் நிலையான ஒரு முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில்தான் தன் மீது கொடுக்கப்பட்ட கிரிமினல் வழக்கு விசாரணைக்கு தடை கோரிய விஜய் சேதுபதியின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. அதில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட படி சமரசம் பேசப்படவில்லையா என நீதிபதி கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி தரப்பு சமரசம் பேசும் முயற்சி தோல்வியில் முடிவடைந்து விட்டது என்று பதில் அளித்தது.விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் வழக்கு விசாரணையை தடை செய்ய முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி!மேலும் விஜய் சேதுபதியின் மீது தொடுக்கப்பட்டுள்ள கிரிமினல், அவதூறு வழக்குகளுக்கு கீழமை நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் விஜய் சேதுபதியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, கீழமை நீதிமன்றங்களில் விஜய் சேதுபதி மீதான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இதனால் இந்த வழக்கில் அடுத்தது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு விஜய் சேதுபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

MUST READ