- Advertisement -
தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவர் பிரியங்கா மோகன். தெலுங்கில் கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமானார். நானியுடன் சேர்ந்து அவர் நடித்த அத்திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார் பிரியங்கா மோகன். அதைத் தொடர்ந்து, சூர்யாவுடன் சேர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருப்பார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இரண்டு திரைப்படங்களின் மூலமும் ரசிகர்களை கவர்ந்தவர் பிரியங்கா மோகன்.

தற்போது தனுஷூடன் இணைந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுடன் ரசிகர் ஒருவர் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், அதற்கு அவருக்கு தொகுப்பாளினி தர்ம அடி கொடுத்துள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலனாது. இது தொடர்பாக பிரியங்கா மோகனிடம் நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.




