

ஜவுளி நகரில் கட்டடம் இடிந்து பணியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர் அருகே உள்ள ஜவுளி நகரில் வெங்கடாஜலபதி என்பவர் ஓராண்டுக்கு முன்பு தான் கட்டிய கான்கீரிட் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், தனது வீட்டின் மாடியில் இரண்டு அறைகளை வெங்கடாஜலபதி கட்டியுள்ளார். புதிதாகக் கட்டப்பட்ட அறைகளின் பூச்சு வேலைகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.
இன்று (ஜன.07) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், ஓசூரைச் சேர்ந்த பணியாளர்கள் ஆனந்தன், நாகேந்திரன், சிவராஜ் ஆகியோர் இன்றும் பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்தனர்.இந்த சூழலில், பில்லர் இல்லாமல் வீடு கட்டியதன் காரணமாக, அந்த இரண்டு அறைகளும் இடிந்து விழுந்துள்ளது. இதில் வீடு முழுவதும் இடிந்து விழுந்துள்ளது.
தகவலறிந்து வந்த பவானி தீயணைப்புத்துறை வீரர்கள், கட்டட இடிபாடுகளில் சிக்கிய ஆனந்தன், சிவராஜ் ஆகியோரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுமதி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
“எந்தெந்த நிறுவனங்கள்? தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடுகளைச் செய்துள்ளது?”- விரிவான தகவல்!
இதனிடையே, கட்டட இடிபாடுகளில் சிக்கிய மற்றொரு பணியாளர் நாகேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஈரோடு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வுச் செய்து வருகின்றனர்.


