Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு இடைத்தேர்தல்- அண்ணாமலை தலைமையில் பாஜக ஆலோசனை

ஈரோடு இடைத்தேர்தல்- அண்ணாமலை தலைமையில் பாஜக ஆலோசனை

-

- Advertisement -

கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

annamalai

we-r-hiring

கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், அண்ணாமலை, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் சிபி.ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக முக்கிய மாநில நிர்வாகிகளின் கூட்டம் பாரதி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமை தாங்கினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி-4 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு பிப்ரவரி – 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி- 31ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க பாஜக சார்பில் 14 பேர் அடங்கிய குழு அமைத்துள்ளது குறிப்பிடதக்கது.

MUST READ