spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதொழிலதிபருடன் ரகசிய திருமணம்... கடுப்பாகி மறுப்பு தெரிவித்த அஞ்சலி...

தொழிலதிபருடன் ரகசிய திருமணம்… கடுப்பாகி மறுப்பு தெரிவித்த அஞ்சலி…

-

- Advertisement -
நடிகை அஞ்சலி தொழிலதிபருடன் ரகசிய திருமணம் செய்துவிட்டு, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் முன்னணி நாயகி அஞ்சலி ஆவார். ராம் இயக்கி கற்றது தமிழ் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகியவர் நடிகை அஞ்சலி. அடுத்து, வசந்த பாலன் இயக்கி வெற்றி பெற்ற அங்காடித் தெரு படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அஞ்சலியின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. மேலும், நடிகை அஞ்சலியை முன்னணி நடிகையாகவும் கோலிவுட் திரையுலகில் உயர்த்தியது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு எங்கேயும் எப்போதும்,அஜித் நடித்த மங்காத்தா, ஆகிய பட படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

we-r-hiring
அவரது நடிப்பில் மாறுபட்ட திரைப்படம் இறைவி. அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வந்ததாகவும், இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் ஒரு காலக்கட்டத்தில் வெளியாகின. பிறகு ஜெய்யை பிரேக்அப் செய்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க அஞ்சலி ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது ராம் இயக்கத்தில் மீண்டும் நடித்திருக்கிறார். ஏழு மலை ஏழு கடல் என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். தெலுங்கில் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரணுடன் இணைந்து அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை அஞ்சலி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகை அஞ்சலி, எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் நடைபெற்றதை நினைத்து எனக்கு சிரிப்பு வருகிறது. அதேசமயம் கோபமடைந்த அஞ்சலி, நடிகை என்பதால் அவர்களை பற்றி வாய்க்கு வந்தபடி எழுதிகிறார்கள் என அதிருப்தி தெரிவித்தார்.

MUST READ