spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகிஷன் தாஸ் நடிக்கும் 'தருணம்'.... டீசர் குறித்த அறிவிப்பு!

கிஷன் தாஸ் நடிக்கும் ‘தருணம்’…. டீசர் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

கிஷன் தாஸ் நடிக்கும் 'தருணம்'.... டீசர் குறித்த அறிவிப்பு!பிரபல யூட்யூபர் கிஷன் தாஸ், கடந்த 2022 ஆம் ஆண்டு தர்புகா சிவா இயக்கத்தில் வெளியான முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பாக கிஷன் தாஸ் நடிப்பில் சிங்க் எனும் ஹாரர் திரைப்படம் வெளியானது. மேலும் ஈரப்பதம் காற்று மழை எனும் படத்திலும் நடித்து வருகிறார் கிஷன் தாஸ்.

இதற்கிடையில் கிஷன் தாஸ் நடிக்கும் தருணம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தின் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இதில் கிஷன் தாஸுக்கு ஜோடியாக தடம், மாறன், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். ஜென் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2023 ஜூன் மாதத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. கிஷன் தாஸ் நடிக்கும் 'தருணம்'.... டீசர் குறித்த அறிவிப்பு!அதைத்தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தருணம் படத்தின் டீசர் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ