spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர் சரிவில் தங்கம் விலை - இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

தொடர் சரிவில் தங்கம் விலை – இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

-

- Advertisement -

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

சென்னையில் இன்றும் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் குறைந்துள்ளது.

we-r-hiring

சென்னையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏறி, இறங்கி விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் கடந்த திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் செவ்வாய் கிழமை தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் குறைந்தது. தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் குறைந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை 5 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது.

MUST READ