சென்னை காசி மேட்டில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.


சென்னை காசிமேடு சிங்கார வேலர் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய தேவா, அஜய் மற்றும் 21 வயதுடைய சக்தி ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள துணிக்கடையில் புத்தாடைகள் வாங்கி விட்டு இருசக்கர வாகனத்தை 17 வயது அஜய் ஒட்டி வந்துள்ளான். காசிமேடு சூரிய நாராயண சாலையில் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்தனர்.
இதில் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த அஜய் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த சக்தி இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதில் கீழே விழுந்து தலையில் அடி பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த தேவாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் தேவாவை பரிசோதனை செய்துவிட்டு, அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காசிமேடு போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்


